வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லையில் அரசுப் பேருந்து மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

News image
Updated On :27 ஜூலை 2016, 8:54 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தேசிய நெடுஞ்சாலைக் குடியிருப்பு நோபுள் தெருவை சேர்ந்தவர் சந்தானம் மகன் முத்துக்குமார் (61). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.

முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி தெற்குபுறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சிவகிரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

புறவழிச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.