வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 6 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2016, 9:38 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.

நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்யாததால் எதிர்பார்த்தவாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. அணைகளின் தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு கார் சாகுபடி முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே 2 நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.  வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்) பாபநாசம் அணை-41, பாபநாசம் கீழ் அணை-2, சேர்வலாறு அணை-6, மணிமுத்தாறு அணை-6.2, கடனாநதி அணை-6, ராமநதி அணை-5, கருப்பாநதி அணை-1, குண்டாறு அணை-29, அடவிநயினார் அணை-7, கொடுமுடியாறு அணை-25, கன்னடியன் அணைக்கட்டு-1.4, அம்பாசமுத்திரம்-1, தென்காசி-3, செங்கோட்டை-5, நான்குனேரி-4.5, களக்காடு- 36.2, மூலக்கரைப்பட்டி-3, பாளையங்கோட்டை-2 திருநெல்வேலி-7.5.

மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளின்  நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1683.91 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 540 கனஅடி, கடனாநதி அணைக்கு 157 கனஅடி, ராமநதி அணைக்கு 40 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 43 கனஅடி, குண்டாறு அணைக்கு 16 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 41 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 72.90 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 6.56 அடி உயர்ந்து 85.56 அடி,  மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.88 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்து 59.90 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 63 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.77 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 70.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 17.85 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.04 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.

விவசாயம், குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 1054.75 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 75 கனஅடி, கடனாநதி அணையிலிருந்து 80 கனஅடி, ராமநதி அணையிலிருந்து 40 கனஅடி, அடவிநயினார் அணையிலிருந்து 25 கனஅடி, குண்டாறு அணையிலிருந்து உபரிநீர் 16 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.