பொறியியல் படிப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சேர்க்கை கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் 2015-16 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 1.18 லட்சம் இடங்கள் நிரம்பவில்லை.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான புள்ளி விவரத்தை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2015-16 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 10 அரசுக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 553 சுயநிதி பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 583 பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருந்தன.
இவற்றில் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 761 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.
1.18 லட்சம் இடங்களில் சேர்க்கை இல்லை: இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக இடங்களும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 795 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1 லட்சத்து 20 ஆயிரத்து 966 இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை.
இதில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் பெரும்பாலான இடங்களே சேர்க்கை இன்றி காலியாக இருந்தன.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 75 ஆயிரத்து 561 இடங்கள் இருந்தன. இவற்றில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 693 இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை.
எஸ்.சி., எஸ்.டி. சேர்க்கை அதிகரிப்பு: இருப்பினும், 2015-16 கல்வியாண்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பொறியியல் படிப்புகளில் சேருவது கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளது. அதாவது, எஸ்.சி. பிரிவினர் 29,391 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,620 பேர் கூடுதலாகும். அதேபோல எஸ்.சி.ஏ. பிரிவினர் 3,676 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 707 பேர் கூடுதலாகும். எஸ்.டி. பிரிவினர் 1,049 பேர் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 186 பேர் கூடுதலாகும்.
கடந்த 2014-15 கல்வியாண்டில் எஸ்.சி. பிரிவினர் 26,771 பேரும், எஸ்.சி.ஏ. பிரிவினர் 2,969 பேரும், எஸ்.டி. பிரிவினர் 863 பேரும் பொறியியல் சேர்ந்தனர்.
2013-14 கல்வியாண்டில் எஸ்.சி. பிரிவினர் 26,258 பேரும், எஸ்.சி.ஏ. பிரிவினர் 3,235 பேரும், எஸ்.டி. பிரிவினர் 826 பேரும் சேர்க்கை பெற்றனர்.
2012-13 கல்வியாண்டில் எஸ்.சி. பிரிவினர் 19,940 பேரும், எஸ்.சி.ஏ. பிரிவினர் 2,324 பேரும், எஸ்.டி. பிரிவினர் 468 பேரும் சேர்க்கை பெற்றிருந்தனர்.
2011-12 கல்வியாண்டில் எஸ்.சி. பிரிவினர் 16,070 பேரும், எஸ்.சி.ஏ. பிரிவினர் 1,751 பேரும், எஸ்.டி. பிரிவினர் 387 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களும், அதுகுறித்த விழிப்புணர்வும் அடித்தட்டு மக்களை சென்றடைந்திருப்பது இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

