புதுச்சேரி முதல்வர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த எம்எல்ஏ: காரணம் என்ன?
புதுச்சேரியின் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ லஷ்மிநாராயணன், இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்துள்ளார்.


புதுச்சேரி : புதுச்சேரியின் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ லஷ்மிநாராயணன், இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான லஷ்மி நாராயணன் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் அதிமுக மூத்த தலைவர் கண்ணனை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர்.
இந்த நிலையில் அவருக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதவி வழங்கப்படாததால், ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காந்தி திடலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு லஷ்மி நாராயணன் வராமல் புறக்கணித்துவிட்டார்.
அவரை தொடர்பு கொண்ட கேட்ட போது, ஆளுநர் மாளிகையில் இருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...