வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை: தென்மேற்கு பருவ மழை தொடங்கியது?

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தில் மாற்றம் காணப்படுகிறது.தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

News image
Updated On :7 ஜூன் 2016, 10:23 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தில் மாற்றம் காணப்படுகிறது.

தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கிடைக்கும் நீரை கொண்டு நாற்று பாவுதல், உழுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த சில தினங்களில் சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தால்தான் விவசாயப் பணிகள் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆகவே கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்பாசனத்தில் மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் பருவ மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் கணிசமாக நீர் இருப்பு உள்ளதால் சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசின் அனுமதியை எதிர்நோக்கி பொதுப்பணித்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 7 மி.மீ, சேர்வலாறு அணையில் 5 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 1.4 மி.மீ, குண்டாறு அணை, அடவிநயினார் அணைகளில் தலா 2 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 15 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 216.67 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 350 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64.80 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 78.02 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.49 அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 28 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.94 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 35 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23.45 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து 104.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்துக்கு 45 கனஅடி, தாமிரவருணி ஆற்றில் 200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.