இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்: தொழிற்சங்கங்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

நெய்வேலி, என்.எல்.சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் ஜூன் 17-ம் தேதி நடக்கவுள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2016, 9:09 am

சீனிவாசன்

நெய்வேலி: நெய்வேலி, என்.எல்.சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் ஜூன் 17-ம் தேதி நடக்கவுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

என்.எல்.சி தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக என்.எல்.சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு எடுத்து தேர்வு செய்வது வழக்கம். இத்தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக செயல்பட்டு வந்த தொமுச மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் அங்கீகாரம் 2016 ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொழிற் சங்கங்களும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை நடத்த வேண்டும் என தொழிலாளர் நல ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து நெய்வேலி, வட்டம் 13-ல் உள்ள தொழிலாளர் பயிற்சி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய, மண்டல தொழிலாளர் நல ஆணையர்கள் மற்றும் 13 தொழிற்சங்க நிர்வாகிகல் கலந்து கொண்டனர்.

அதன்படி தேர்தலில் போட்டியிட 8 சங்கங்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரண்டு சங்கங்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தற்போது சிஐடியு, அண்ணா தொமுச, பிஎம்எஸ்., பிடிஎஸ்., ஏஐடியுசி., தொமுச என 6 சங்கங்கள் களத்தில் உள்ளன.

ஏற்கனவே பேச்சு வார்த்தை சங்கங்களாக இருந்த தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் மீண்டும் பேச்சு வார்த்தை சங்கமாக வரவேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

முறை புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக நடந்த போராட்டங்கள் மற்றும் 39 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தும் பலனேதும் இல்லாமல் போனதால், பேச்சு வார்த்தை சங்கங்களாக செயல்பட்ட தொமுச, அண்ணா தொழிலாளர் சங்கங்களுக்கு தொழிலாளர்களின் ஆதரவு எந்த அளவு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

சிஐடியு-க்கு 7 சங்கங்கள் ஆதரவு:

சிஐடியு சங்கத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி, இந்து மஸ்தூர் சபா, மறுமலர்சி தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி., தொழிலாளர் வாôழ்வுரிமை சங்கம், தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கங்கள் ஆதரவுடன் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நெய்வேலி, என்.எல்.சி நிறுவனத்துடனான பேச்சு வார்த்தை சங்கம் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்புக்கு இரு தினங்களே உள்ள நிலையில் என்.எல்.சியில் உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.