பண்ருட்டி அருகே என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை
பண்ருட்டி வட்டம் திருத்துரையூர் கிரமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் 45, இவர், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார்.


நெய்வேலி: பண்ருட்டி வட்டம் திருத்துரையூர் கிரமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் 45, இவர், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இவருக்கும், அஞ்சலை என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வடலூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.
புதன்கிழமை இரவு குணசேகருக்கும் அஞ்சலைக்கும் இடையே தங்க நகை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதில், ஆத்திரம் அடைந்த அஞ்சலை குணசேகரனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
தகலறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரதத்தை கைபற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அப்பகுதியில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...