தேனி: உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் மனைவி கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை சரணடைந்தார்.
உடுமலைப்பேட்டை சங்கர் கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு கௌசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
உடனிருந்த கௌசல்யாவுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் சில குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சின்னச்சாமியின் மனைவி அன்னலட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அன்னலட்சுமி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை நீதிபதி சுந்தரி முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

