எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சங்கர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் தேனி நீதிமன்றத்தில் சரண்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் மனைவி கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை சரணடைந்தார். 

Updated On :29 மார்ச் 2016, 6:47 am

தேனி: உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் மனைவி கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை சரணடைந்தார். 

உடுமலைப்பேட்டை சங்கர் கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு கௌசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

உடனிருந்த கௌசல்யாவுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.     இச்சம்பவத்தில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் சில குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சின்னச்சாமியின் மனைவி அன்னலட்சுமியை தேடி வந்தனர்.      இந்நிலையில் அன்னலட்சுமி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை நீதிபதி சுந்தரி முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.