வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 மே 2016, 4:18 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: பாபநாசம் அணை-31 மி.மீ, பாபநாசம் கீழ் அணை-18 மி.மீ, சேர்வலாறு அணை-15 மி.மீ, மணிமுத்தாறு அணை-19.4 மி.மீ, கடனாநதி அணை-1 மி.மீ, ராமநதி அணை-11 மி.மீ, கருப்பாநதி அணை-27 மி.மீ, குண்டாறு அணை-28 மி.மீ, அடவிநயினார் அணை-10 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு-22 மி.மீ,

வடக்குப்பச்சையாறு அணை-2 மி.மீ, நம்பியாறு அணை-5 மி.மீ, அம்பாசமுத்திரம்-28.2 மி.மீ, ஆய்குடி-15.2 மி.மீ, சேரன்மகாதேவி-22 மி.மீ, பாளையங்கோட்டையில் அதிகபட்சம்-50 மி.மீ, திருநெல்வேலி-35 மி.மீ, செங்கோட்டை-28 மி.மீ, சிவகரி-10 மி.மீ, தென்காசி-22.4 மி.மீ, மூலக்கரைப்பட்டி- 16 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் 3 தினங்களாக பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 262.82 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 190 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 209 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 712.25 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாயில் 50 கனஅடி, தாமிரவருணியில் 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம்-64.75 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம்-72.67 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.95 அடி, கடனாநதி அணையின் நீ்ர்மட்டம்-27.60 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம்-25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.94 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம்-11.80 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம்-44.50 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம்-24.60 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம்-13.02 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம்-2.50 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.