ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் சாவு: மூவர் காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :21 மே 2016, 12:13 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கிலிருந்து கிருஷ்ணப்பேரி செல்லும் பாதையில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையை சிவகாசியைச் சேர்ந்த ராஜா என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இங்கு தரைச்சக்கரம், ராக்கெட் உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றது.

14 அறைகள் கொண்ட இந்த தொழிற்சாலையில் 370 தொழிலாளர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஒரு அறையில் தரைச்சக்கரம் வெடிக்கு பவுடர் மருந்து இடிக்கும் போது அதனை அந்த தொழிலாளி கீழே போட்டுள்ளார். இதனால் பயங்கர சத்தத்துடன் மருந்து வெடித்து இரு அறைகள் உடனடியாக இடிந்து தரைமட்டமானது. இதனையடுத்து தொழிலாளர்கள் சிதறி ஓடிவிட்டனர். பின்னர் மேலும் மருந்துகள் வெடித்து சிதறி மேலும் 5 அறைகள் வெடித்து சிதறியது.

இதில் சிவகாசி, கங்காகுளத்தைச் சேர்ந்த பெ. இருளப்பன் (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். மேலும் க.சந்தானம் (24), க.கணேசன் (25), க.ஆறுமுகக்கனி (21) ஆகிய மூவர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.வேணுகோபால் மற்றும் போலீஸார் விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புப் படையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.