புதுவையில் அதிர்ச்சி: கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.11 சதம் தேர்ச்சி குறைவு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 0.11 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 0.11 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் 7345 மாணவர்கள், 7547 மாணவியர் என 14892 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 6714, மாணவியர் 7207 என மொத்தம் 13921 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 92.28 சதவீதம் ஆகும்.
காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் 1358 மாணவர்களும், 1502 மாணவியரும் என மொத்தம் 2860 பேர் தேர்வு எழுதினர். இதில் 1109 மாணவர்கள், 1377 மாணவியர் என மொத்தம் 2486 தேர்ச்சி பெற்றனர். தேர்சி விகிதம் 87.14 பேர் ஆகும்.
மொத்தம் 17752 மாணவ, மாணவியரில் 16407 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.11 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைவாகும்.
புதுச்சேரி, காரைக்காலில் மாணவர்களே விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 8703 மாணவர்களில் 7823 பேர் தேர்ச்சி பெற்றனர். விழுக்காடு 89.89. மாணவிகளில் 9049 பேர் தேர்வு எழுதி 8584 பேர் வென்றனர். தேர்ச்சி சதவீதம் 94.86 ஆகும்.
135 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
மொததம் உளள 298 பள்ளிகளில் 135 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் 10 ஆகும். 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 45 ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...