புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்பு
புதுச்சேரியின் 4-வது பெண் துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி இன்று பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற


புதுச்சேரியின் 4-வது பெண் துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி இன்று பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாரி ரமேஷ் கிரண்பேடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் அம்மாநில முதல்வராக தேர்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி, முன்னாள் முதல்வரும் என். ரங்கசாமி, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், புதிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, புதுச்சேரியின் 4வது பெண் துணைநிலை ஆளுநர் என்ற பெருமை கிரண்பேடிக்கு கிடைத்தது.
புதுச்சேரி ஆளுநராக பதவி வகித்த வீரேந்திர கட்டாரியா, கடந்த ஜூலை 2014-ஆம் ஆண்டுடன் விடைபெற்றார். அவரைத் தொடர்ந்து, அந்தமான் நிகோபார் ஆளுநர் ஏ.கே.சிங் கடந்த 2 ஆண்டுகளாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...