கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடனை திருப்பி செலுத்தாத 'கபாலி' தயாரிப்பாளரை  கைது செய்யுங்க: கோர்ட் அதிரடி உத்தரவு!

திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2016, 11:27 am

நாகர்கோவில்: திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர்  திரையரங்க உரிமையாளர் டேவிட். இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தம்மிடம் வாங்கிய ரூ2 லட்சம் கடனை தாணு திருப்பித் தரவில்லை என்று வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் டேவிட்டிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தர தாணுவுக்கு உத்தரவிட்டது. ஆனால் அதற்குப் பின்பும் டேவிட்டுக்கு தாணு பணத்தைத் தரவில்லை. இது குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் டேவிட் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து வரும் 28-ந் தேதிக்குள் தாணுவை கைது செய்யுமாறு காவல்துறைக்கு நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.