புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சில குறிப்பிட்ட வகை போன்களுக்கு டிசம்பருக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை கிடையாதாம்: உஷார்!

குறிப்பிட்ட சில இயங்கு செயலிகளை பயன்படுத்தும் ஆண்டிராய்டு போன்கள் மற்றும் சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை கிடையாது என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

News image
Updated On :3 நவம்பர் 2016, 11:00 am

DIN

சென்னை: குறிப்பிட்ட சில இயங்கு செயலிகளை பயன்படுத்தும் ஆண்டிராய்டு போன்கள் மற்றும் சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை கிடையாது என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிம்பியான் இயங்கு செயலிகளை (ஆபரேட்டிங் சிஸ்டம்) கொண்ட குறிப்பிட்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றிற்கு டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு வாட்ஸ் அப் சேவை கிடைக்காது.

இந்த வகை போன்களும் எங்களுக்கு முக்கியம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் எதிர்கால சேவை மாற்றங்களுக்கு ஏற்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த வகை போன்களில் இல்லை. எனவேதான் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது.

எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இனி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் வேறு போனை மாற்றிவிடுங்கள். அப்போதுதான் இந்த வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பெற முடியும்"

இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவன இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை துண்டிக்கபட வாய்ப்பு உள்ள சில குறிப்பிட்ட அலைசி மாடல்களின் பட்டியல் பின்வருமாறு:

சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள்; பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10; நோக்கியா எஸ் 40; நோக்கியா எஸ் 60; ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2; வின்டோஸ் போன் 7.1; ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ்;  ஐஓஎஸ் 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.