சென்னையில் கைதான சுலைமானை பெங்களூரு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி! 

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட, அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சுலைமானை பெங்களூருவுக்கு விசாரணைக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி...
சென்னையில் கைதான சுலைமானை பெங்களூரு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி! 

சென்னை: முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட, அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சுலைமானை பெங்களூருவுக்கு விசாரணைக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுலைமான் தாவூத் என்னும்  அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் மதுரையில் அல்கய்தா அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் படி சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சுலைமான் தாவூத் என்னும் இளைஞரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர் இன்று மதியம் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தென் மாநிலங்களில் நடைபெற்ற நான்கு நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, சுலைமானை பெங்களூருவுக்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நீதிபதி பிரகாஷிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுலைமானை பெங்களூருவுக்கு அழைத்து சென்று விசாரிக்க அனுமதி கொடுத்தார்   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com