சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மு.க. ஸ்டாலின் சந்தித்தது ஏன்?

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:44 am

DIN


சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துவதற்காக, ஓ. பன்னீர்செல்வத்தை, மு.க. ஸ்டாலின் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உடனிருந்தார்.

அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகளுடனான கூட்டத் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை மு.க. ஸ்டாலின், பன்னீர்செல்வத்திடம் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.