கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பு கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :15 அக்டோபர் 2016, 7:26 am


சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், பொதுத் துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலையை தனியாருக்கு மாற்றக் கூடாது.

தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் சேது கால்வாய் திட்டம் மற்றும் சேலம் உருக்காலை, தமிழர்களின் கனவுத் திட்டம் என்றும் கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.