சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்: சி.ஆர். சரஸ்வதி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

News image
Updated On :20 அக்டோபர் 2016, 8:58 am


சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களும், சிறப்பு மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் விரைவில் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார்.

பொதுமக்களிக்கான தனது வாழ்வை அர்ப்பணித்த ஜெயலலிதாவை, மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

மற்றபடி, அவர் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார். கடவுள் அவர் பக்கம்தான் உள்ளார்  என்றும் சரஸ்வதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.