இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வடகிழக்குப் பருவமழை நீரை சேமிக்கும் வகையில் பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image

பரந்து விரிந்துள்ள பரந்தூர் ஏரி. (வலது) பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் ஏரிக் கால்வாய்.

Updated On :23 அக்டோபர் 2016, 3:59 am IST

வடகிழக்குப் பருவமழை நீரை சேமிக்கும் வகையில் பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்-சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ளது பரந்தூர். இந்த ஊராட்சியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரியை நம்பி பரந்தூர், மேட்டுப் பரந்தூர், பள்ளப்பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 750 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் பரந்தூர் ஏரி, முறையான
பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. மேலும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்த நிலையிலும், மதகுகள் சேதமடைந்தும் உள்ளன. இதனால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சிலர், பம்ப் செட் மூலம் ஏரியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, தங்களது நிலங்களுக்கு பாய்ச்சுகின்றனர். வசதியில்லாத ஏழை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் பரந்தூர் ஏரியின், மதகு, கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.