வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை அருகே பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி அருகே பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

News image
Updated On :25 அக்டோபர் 2016, 10:49 am

ஷேக் அப்துல்காதர்



திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை நேதாஜிநகரை சேர்ந்தவர் பேச்சி (42). இவரது மனைவி குருலட்சுமி (36). கங்கைகொண்டான் அருகே அனைத்தலையூரை சேர்ந்தவர் சங்கரவேலு மகன் சீனித்துரை (24). குருலட்சுமிக்கும், சீனித்துரைக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 29.7.2013 அன்று பேச்சிக்கும், குருலட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு பேச்சி வெளியே சென்று விட்டாராம்.

இதனிடையே, சீனித்துரை, குருலட்சுமியை சந்திப்பதற்காக பேச்சி வீட்டுக்கு வந்ததாரம். அப்போது சீனித்துரை, குருலட்சுமியை இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சீனித்துரை அங்கிருந்த அரிவாளால் குருலட்சுமியை வெட்டி விட்டு தப்பிவிட்டார். சம்பவ இடத்திலேயே குருலட்சுமி இறந்து விட்டார்.

கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப் பதிந்து சீனித்துரையை கைது செய்தனர். இவ்வழக்கு திருநெல்வேலி 4 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, செவ்வாய்க்கிழமை குற்றவாளி சீனித்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.