பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு: முதல்வர் நாராயணசாமி

சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு போதும் சிலை கடத்தல் கும்பல்-பதுக்கும் கும்பலை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 அக்டோபர் 2016, 9:54 am

சுஜித்குமார்


புதுச்சேரி: சிலைக்கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு போதும் சிலை கடத்தல் கும்பல்-பதுக்கும் கும்பலை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக பகுதியில் மிகப் பழமையான கோவில்களில் சிலைகளை திருடி விற்றதாக சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதே போல் சிலைகளை திருடி தீனதயாளனுக்கு விற்றதாக புஷ்பராஜன் என்பவரை கைது செய்து விசாரித்த போது, திருடப்பட்ட சிலைகளை புதுச்சேரி கோலாஸ்நகரில் உள்ள ஆர்ட் கேலரியில் மறைத்து வைத்து இருப்பதாக தெரிவித்த தகவலின் பேரில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார்
புதுச்சேரி வந்து ரூ. 50 கோடி மதிப்புள்ள 11 சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
சிலை கடத்தல் மற்றும் சிலை பதுக்கும் கும்பலை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம்.  இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி குற்றப்பிரிவு போலீசார் மூலம் சிலை கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.