

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறக்காதது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று கர்நாடக அரசுக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோஹன ராவ் இன்று கர்நாடக அரசின் தலைமைச் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு ஆறு ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டிருக்க வேண்டும். அனால் அதை செய்யத் தவறி இருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.