வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திண்டுக்கல் பாரதிய ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

News image
Updated On :25 செப்டம்பர் 2016, 8:50 am

DIN

திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

திண்டுக்கல் - கரூர் ரெயில்வே கேட்டுக்கு அருகே  பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற  உள்ள நிலையில்  டந்த சில நாட்களாக நிர்வாகிகளிடையே விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள்  குண்டு வீசியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் காரணமாகி திண்டுக்கல்லில் பதட்டம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.