கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆர்.கே.நகர் தேர்தல்: நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்   

வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ..

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:11 pm

DIN

புதுதில்லி: வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் காரணமாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் இரு பிரிவுகளும் பணப்பபட்டுவாடாவில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி  வருகின்றன. மேலும் இரு அணிகளிடையே அடிக்கடி தகராறுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாநில தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் , உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.