டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை ரத்து செய்து ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

தினமணி

சென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் குறிப்பிட்ட விதிமுறைகள் தொழில் நடைமுறைக்கு சிரமமாக இருப்பதாக கூறி வாகனப்பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இரண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் மத்திய அரசின் மோட்டர் வாகன விதிகளில் இரண்டு முக்கியமான விதிகளை ரத்து செய்து தீர்ப்பு அமைந்துள்ளது.

உரிய காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்னும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதே போல வானங்களை விற்கும் போது தடையில்லா சான்றிதழ் பெற தாமதமானால் அபராதம் என்னும்  மத்திய அரசின் மோட்டர் வாகன விதியும் இந்த தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்படுகிறது. 

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு விரைவில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.