சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஈரானில்  விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று சென்னை வருகை

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று இரவு சென்னை வந்தடைகின்றனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

தினமணி

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று இரவு சென்னை வந்தடைகின்றனர்.

இதுகுறித்து, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜஸ்டின் ஆன்றணி தெரிவித்திருப்பதாவது:
தமிழக மீனவர்கள் 15 பேர் பஹ்ரைன் நாட்டு நிறுவனத்தில் மீன்பிடி தொழில் செய்துவந்தனர். இவர்கள், கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் நாட்டு கடற்படையால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விடுவிக்கக் கோரி, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்ததுடன், ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், மீனவர்கள் 15 பேரும் இரு தினங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டு, பஹ்ரைன் வந்தடைந்தனர்.  அங்கிருந்து அவர்கள் அனைவரும் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடைகிறார்கள் என தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.