காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை: உயர் நீதிமன்றத்தில் 'டிராபிக்' ராமசாமி முறையீடு !

வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 10:01 am

DIN

வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தலுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி. இவர சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு முறையீடு தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வது மிக அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்புகள் குறைவு. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த முறையீட்டை வழக்காக மாற்றி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒத்துக் கொண்டது. மேலும் இந்த  வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.