

சென்னை: பிஎஸ் -3 வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்கவோ, பதிவு செய்யவோ தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது சுமார் 4 லட்சம் பிஎஸ்-3 வாகனங்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன.
ஆனால், இரு சக்கர வாகன டீலர்கள் அறிவித்த ஏகபோக சலுகை விலையினால் மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் மட்டும் 90 சதவீத வாகனங்கள் விற்றுத் தீர்ந்து விட்டதாக டீலர்கள் கூறியுள்ளனர்.
ஒரு சில வாகனங்களின் விலையில் 60 சதவீதம் அளவுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டதே, இந்த அளவுக்கு வாகனங்கள் விற்றுத் தீரக் காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, டீலர்களிடம் விற்காமல் தேங்கிய வாகனங்களால், கலாண்டு லாப-நட்டக் கணக்கு, கடந்த காலாண்டு லாப நட்டக் கணக்கோடு பெரிய அளவில் வேறுபடும். கிரிஸில் ரிசர்ச் மேற்கொண்ட ஆய்வில், இந்த வார துவக்கத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களின் மொத்த நட்டம் ரூ.480 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் வாகன டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அறிவித்த விலைத் தள்ளுபடியால் 90 முதல் 95 சதவீத வாகனங்கள் விற்றுத் தீர்ந்தன என்கிறார் ஆட்டோமொபைல் டீலர்களுக்கான சங்கத் தலைவர் ஜாக் கே பால்.
மேலும், விற்பனையாகாத வாகனங்களின் உற்பத்தி செலவு மட்டுமே இப்போது நட்டமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தியான வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் பெற்று அதனை ஏற்றுமதி செய்வதோ அல்லது தொழிற்சாலைகளுக்கு அனுப்பி அதனை சரி செய்வதால் ஏற்படும் செலவும் சேரும் போது நட்டக் கணக்கு இன்னும் அதிகரிக்கும் என்றும், தங்கள் நிறுவனத்துக்கு ரூ.2,500 கோடி ரூபாய் இழப்பு என்றும் சிவி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.