சென்னை: சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே இன்று காலை உருவான 'திடீர்' பள்ளத்தில் பேருந்து ஒன்றும் காரும் சிக்கி விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள சர்ச் பார்க் பள்ளி நிறுத்தத்தின் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கே இன்று காலை 'திடீர்' என்று பள்ளம் ஒன்று உருவானது.
இந்த பள்ளத்தில் சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி வரை செல்லும் 25G பேருந்து சிக்கிக் கொண்டது. அந்த பேருந்தினைத் தொடர்ந்து வந்த கார் ஒன்றும் இந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதில் 10 பேர் வரை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது பள்ளத்தில் சிக்கியுள்ள பேருந்து மற்றும் காரை ராட்சத கிரேன் கொண்டு மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கடந்த வாரம் இதே இடத்தில் பள்ளம் ஒன்று உருவாகி ரசாயன புகை வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


