வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு வாக்குக்கு கொடுக்கப்பட்ட பணம் கறுப்பா? வெள்ளையா? ப.சிதம்பரம் கேள்வி

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குக்கு கொடுக்கப்பட்ட பணம் கறுப்பா? வெள்ளையா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:15 pm

DIN

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குக்கு கொடுக்கப்பட்ட பணம் கறுப்பா? வெள்ளையா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், அத்தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. மேலும், வருமான வரித்துறையினரும் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். இதன் விளைவாக தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவிற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அதிரடி முடிவு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், கடந்தாண்டு கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக மோடி அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.
    
இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளது.

    We were told demonetisation has put an end to black money. Was money distributed in R K NAGAR white money?
    — P. Chidambaram (@PChidambaram_IN) April 10,    2017

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்குக்கு கொடுக்கப்பட்ட பணம் கறுப்பு பணமா? இல்லை வெள்ளை பணமா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.