விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில்வே இடத்தில் கட்டடம் கட்டிய விவகாரம்: மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2017, 9:59 pm

DIN

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பொன் விழா நகரைச் சேர்ந்தவர் ஷபிதா பானு. இவர், கடந்த 2010 -ஆம் ஆண்டு முருகேசன் என்பவரிடமிருந்து 1,040 சதுர அடி நிலத்தை வாங்கி, மூன்று மாடி கொண்ட கட்டடம் கட்டியுள்ளார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் ஐசிஎஃப்.க்கு சொந்தமானது எனக் கூறி, அதன் தலைமை பொறியாளர், கட்டடத்தை காலி செய்யும்படி கடந்த 2014 -ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஷபிதா பானு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2015 -ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வரைபட அனுமதியை சமர்ப்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், கட்டடத்தை வரன்முறைப்படுத்தக் கோரி மாநகராட்சிக்கு அவர் விண்ணப்பித்தார். இதையடுத்து, அந்த கட்டடத்தை அகற்றும்படி மாநகராட்சி "நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து ஷபிதா பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சம்பந்தப்பட்ட நிலமானது, இந்திய ரயில் பெட்டி தொழிற்சாலைக்குச் சொந்தமானது என்பதும், திட்ட அனுமதி இல்லாமல் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. ஆகையால், மனுதாரருக்கு எந்தவித சலுகையும் வழங்க முடியாது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.