வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கலந்துகொள்ளும்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு

திமுக சார்பில் சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கலந்துகொள்ளும் என மாநில

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

DIN

சென்னை: திமுக சார்பில் சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கலந்துகொள்ளும் என மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக, அதிமுக தவிர பிற கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்போம்' என இந்திய கம்யூனிஸ்ட மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்திருந்தார்.

இதுபோல், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்' என அதன் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், "திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் எங்களுடைய நிலைப்பாடு அறிவிக்கப்படும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். அதன்படி, இன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தின் ஆலோசனையின் படி, திமுக சார்பில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி கலந்துகொள்ளும் என மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.