வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இரட்டை இலைக்கு பேரம்: தினகரனை விசாரிக்க சென்னை வரயிருந்த தில்லி போலீஸின் பயணம் 'திடீர்' ரத்து

இரட்டை இலையைப் பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தர முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வரயிருந்த தில்லி போலிசாரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 8:31 am

DIN

புது தில்லி: இரட்டை இலையைப் பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தர முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வரயிருந்த தில்லி போலீசாரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த புது தில்லியில் இருந்து சென்னைக்கு தில்லி போலீஸார் வருவதற்காக இரண்டு விமானங்களில் பயணச் சீட்டுகள் நேற்று முன்பதிவு செய்யப்பட்டன.

ஆனால், திடீரென அந்த விமானப் பயணச் சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே தில்லி போலிசாரின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, இரட்டை இலையை சசிகலா அணிக்குப் பெற்றுத் தர தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க இடைத் தரகரிடம் பேரம் பேசியக் குற்றச்சாட்டின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைத் தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தில்லி போலிசார் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த இன்று சென்னை வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், தில்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா அளித்த தகவல்களின் அடிப்படையில், தில்லியில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் முழுமையான தகவல்களை திரட்டியப் பிறகு விசாரணைக் குழுவை சென்னை அனுப்பலாம் என்று தில்லி போலிசின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இவர்கள் நாளை சென்னை வர வாய்ப்பிருக்கிறதா என்பதற்கும் உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.