டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிஜிட்டல் மயமாகிறது தமிழக அரசு கேபிள் டி.வி!

அரசு கேபிள் டி.வி ஒளிபரப்பு முழுமையாக டிஜிட்டல் மயமாக மாற உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

சென்னை: அரசு கேபிள் டி.வி ஒளிபரப்பு முழுமையாக டிஜிட்டல் மயமாக மாற உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சார்பாக  'அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன்' என்னும் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கேபிள் தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சேவைகள் அனலாக் என்னும் பழைய வடிவத்தில் இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்தன. 

இந்த சேவைகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தது. இந்த கோரிக்கை நெடுநாட்களாக பரிசீலனையில் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன்' கேபிள் ஒளிபரப்பு சேவைகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் ஒளிபரப்பு விரைவில் அமலுக்கு வருமென்று தெரிகிறது.

மேலும் டிஜிட்டல் சேவைக்கு அனுமதியளித்ததற்காக மத்திய அரசுக்கும், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.