புதிய வீராணம் திட்டம் பம்பு ஆப்பரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


பண்ருட்டி: புதிய வீராணம் திட்டத்தில் பணியாற்றும் பம்ப் ஆப்பரேட்டர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை குடிநீர் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் குடிநீர் பம்பு ஆப்பரேட்டர்களை தமிழ்நாடு நிர்ந்தர தகுதி அளிக்கும் சட்டம் 1982ன் படி நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னைக்குச் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் விதமாக வீராணம் குடிநீர் பம்ப்புகளுக்கு பூட்டு போட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள அடிப்படை ஊதியம், பஞ்சப்படியுடன் இணைந்த குறைந்தசபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும், வருங்கால வைப்பு நிதி, சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.

இது குறித்து சென்னைக் குடிநீர் வழங்கல் வாரிய மேலாண் இயக்குநருக்கு 12.4.2017ல் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் பி. துரை,என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் பொதுச் செயலர் கே. வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com