கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திமுக துரோகம்: பொது அரங்கில் விவாதிக்க தயாரா?: ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகங்களை பொது அரங்கில் விவாதிக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:24 pm

DIN

காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகங்களை பொது அரங்கில் விவாதிக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி பிரச்னையில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டதற்கு திமுக மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். காவிரிப் பிரச்னையில் திமுக செய்த துரோகங்களில் முதன்மையானது அந்த ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்காதது ஆகும்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு 1998-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. ஆனால், கருணாநிதியோ ஒன்றுக்கும் உதவாத காவிரி நதிநீர் ஆணையத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார். இதன் பிறகாவது விவசாயிகளுக்கு திமுக இழைத்த துரோகங்களை மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொள்ள வேண்டும். விளக்கங்களை ஏற்க மறுத்தால், இவை குறித்து பொது அரங்கில் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளரா என்பதை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.