நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"நீட்' தேர்வுக்கு தமிழக கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது அவமானம்: இல.கணேசன்

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் "அற்புத ராமானுஜர்'

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 3:53 am

DIN

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் "அற்புத ராமானுஜர்' என்ற தலைப்பில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் சொற்பொழிவுகள் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நீட்' தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது அவமானம். "நீட்' தேர்வு தொடர்பாக இறுதி முடிவை குடியரசு தலைவர் தான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் "நீட்' தேர்வுக்கு பயிற்சி அளித்தால் மாணவர்களின் திறமைகள் மேம்படும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கூறியுள்ளார்.   

மேலும், மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் தாய், தனது அடுத்த மகனையும் போர்க்களத்துக்கு அனுப்புவேன் என்று கூறியது தேச பக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மீனவர்கள் மீது எக்காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது இந்திய - இலங்கை  நட்புறவை பலப்படுத்தியுள்ளது.

அதிமுக இரண்டாக பிளவுபட்டு இணைய உள்ளதன் பின்னணியில் பாஜக உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது பாஜகவுக்கு இலவச விளம்பரத்தை கேட்காமலே அளிப்பது போன்று உள்ளது என்றார் இல.கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.