இரண்டு அணிகளும் இணையத் தேவையில்லை: அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தொண்டர்கள் கருத்து
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணையத் தேவையில்லை என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சேலம்: அதிமுகவின் இரண்டு அணிகளும் இணையத் தேவையில்லை என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.செம்மலை, முன்னாள் எம்எல்ஏ-க்கள் விஜயலட்சுமி பழனிசாமி, எஸ்.இ.வெங்கடாசலம், எம்.கே.செல்வராஜ், எஸ்.கே.செல்வம், முன்னாள் துணை மேயர் மு.நடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு இரண்டு அணிகள் இணைவது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு எஸ்.செம்மலை செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு அணிகளும் இணையத் தேவையில்லை என்று தொண்டர்கள் பரவலாக கருத்து தெரிவித்தனர்.
மேலும் தொண்டர்களின் மனநிலையை தங்களது தலைவர் ஓ.பன்னீர்செல்வதிடம் தெரிவிப்போம். தங்களது தரப்பை பொருத்தவரை இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு எங்களது கதவுகள் திறந்தே உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை. தொண்டர்களின் மனநிலைதான் எங்களுக்கு முக்கியம்.
அதேநேரத்தில் எங்கள் அணி தலைவர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக என்ன முடிவு மேற்கொள்கிறாரோ அதற்கு நாங்களும், தொண்டர்களும் முழுமையாக கட்டுபடுவோம். மாற்று அணியினர் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது முறையல்ல. ஆனால் அவர்களோ இதுவரை முறையான அழைப்பு எதுவும் விடுக்காமல் தங்களை கேவலப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தட்டிக்கழிக்கும் செயல்.
சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு காரியங்களை அவர்கள் செய்தால் மட்டுமே சுமுகமான சூழல் ஏற்படும்.
அந்த கருத்துக்களுக்கு பதில் அளிக்காமல் மாற்று அணியினர் வேறு என்னென்னவோ கூறுகின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை தொடர்ந்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...