
மதுரை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தணடனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தணடனை பெற்று சிறையில் இருப்பவர் ரவிச்சந்திரன். இவரது தாயார் ராஜேஸ்வரி இலங்கையில் உள்ளார். இவர் சமீபத்தில் தமிழகம் வந்து, தனது மகனைப் பார்க்க மனு செய்திருந்தார்.
அப்பொழுது தனது வயோதிகம் மற்று உடல்நிலை சார்ந்து, தனது மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், எனவே அதன்பொருட்டு ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது இந்த பரோல் மனுவுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனவே ரவிச்சந்திரனின் பரோல் மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.