மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா இறந்த பிறகு ஊழல் பற்றி கமலஹாசன் பேசுவது ஏன்?

ஜெயலலிதா இறந்த பிறகு கமலஹாசன் ஊழல் பற்றி பேசுவதற்கான காரணம் என்ன என, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளார்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2017, 8:10 pm

DIN

ஜெயலலிதா இறந்த பிறகு கமலஹாசன் ஊழல் பற்றி பேசுவதற்கான காரணம் என்ன என, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளார்.
ராமேசுவரத்தில் திரையுலகத்தினர் சார்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது க்யூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு, ராமநாதபுரம் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக, இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி லிங்கேசுவரன், இருவரையும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை இணைப்பதில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது, பா.ஜ.க.வுக்கு தேவையில்லாத வேலையாகும். தமிழகத்தில் பா.ஜ.க.வால் தலையெடுக்கவே முடியாது. அதேபோல், அதிமுகவுக்கும் எதிர்காலம் கிடையாது.
ஊழல்வாதியான மு.க. ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்போம் என கமலஹாசன் கூறுவதில் அர்த்தமில்லை. ஊழலுக்காக கருணாநிதியும், ஜெயலலிதாவும் சிறைக்குச் சென்றபோது, கமலஹாசன் ஒன்றும் பேசவில்லை.
தற்போது, கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். ஜெயலலிதா இறந்துவிட்டார். இப்போது, கமலஹாசன் ஊழலைப் பற்றி பேசி வருகிறார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் செய்த போதெல்லாம் ஊழலைப் பற்றி பேசாத கமலஹாசன், இப்போது வாய் திறந்து பேசக் காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எனக்கு கை கொடுங்கள் எனக் கூறி வரும் கமலஹாசன், ஊழலுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்துள்ள எனக்கு ஆதரவாக இதுவரை எப்போதும் குரல் கொடுக்கவே இல்லையே. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.