கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழகத்தில் இன்று மழை நீடிக்கும்: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழை நீடிக்கும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:41 pm

DIN


சென்னை: தமிழகத்தில் இன்று மழை நீடிக்கும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், மழை நிலவரம் குறித்த தகவல்களை அளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: வட தமிழகப் பகுதிகளில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை தொடரும்.  இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது.

பதிவான மழையின் அடிப்படையில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மாலை அல்லது இரவில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. 

அதே சமயம், இப்போது இருப்பதை விட வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழையின் அளவானது படிப்படியாகக் குறையும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.