வேதா இல்லம் விவகாரத்தில் தலையிட பொதுஅறிவு போதும்: ஓபிஎஸ்-க்கு டிகேஎஸ் இளங்கோவன் பதில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா இல்லம் விவகாரத்தில் தலையிட சட்டம் படித்து வழக்குரைஞராக
வேதா இல்லம் விவகாரத்தில் தலையிட பொதுஅறிவு போதும்: ஓபிஎஸ்-க்கு டிகேஎஸ் இளங்கோவன் பதில்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா இல்லம் விவகாரத்தில் தலையிட சட்டம் படித்து வழக்குரைஞராக இருக்கவேண்டிய அவசியமில்லை, பொது அறிவு இருந்தால் போதும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று நேற்று வியாழக்கிழமை (ஆக 17) முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவில்லமாக்கும் பணிக்கான ஆய்வை இரு தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக எதிர் கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை நினைவில்லமாக்குவது சட்டப்படி தவறு என கூறினார்.

இதையடுத்து ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக்குவது குறித்து கருத்து சொல்ல, ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வழக்குரைஞர் அல்ல என்று கூறினார்.

இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தனியார் சொத்தை அரசு பறிமுதல் செய்ய முடியாது. ஜெயலலிதா வேதா இல்லத்தை சட்டப்படி நினைவில்லமாக்க முடியாது. அது பற்றி கூற வழக்குரைஞர் தேவையில்லை. பொது அறிவு இருந்தால் போதும் என்று ஓபிஎஸ்-க்கு பதில் அளிக்கும் வகையில் கூறினார்.

மேலும், தேவை ஏற்பட்டால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். அதிமுக அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்று இளங்கோவன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com