நெய்வேலியில் பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து: 13 மாணவிகள் காயம்

நெய்வேலி குண்டான்குளம் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் தடுப்பு கட்டையில் ஏறி மரத்தில் மோதியதில் 13 மாணவிகள் காயமடைந்தன. 

பண்ருட்டி: நெய்வேலி குண்டான்குளம் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் தடுப்பு கட்டையில் ஏறி மரத்தில் மோதியதில் 13 மாணவிகள் காயமடைந்தன. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள பி-2வது பிளாட் மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் மகள் சபரியா (16), முருகன் மகள் அக்ஷயா (16), வேல்முருகன் மகள் லாவண்யா (16), சடையன் மகள் பிரபாவதி (16), அறிவழகன் மகள் ராஜேஷ்வரி (16) ராமு மகள் கிர்த்திகா (15), தர்மராஜ் மகள் யமுனா ஸ்ரீ (16), அருளானந்த் மகள் நான்சி (16), சித்தார்த்தன் மகள் பிரியதர்ஷ்னி (16), பாலதிலகர் மகள் கவிதா (17) அருளானந்தன் மகள் கிளாரா நான்சி மேரி (15), வேல்முருகள் மகள் சங்கீதா (16), விஷ்வநாதன் மகள் அனிதா (16) ஆகியோர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி மேல்நிலை பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் இவர்கள் தனியார் வேனில் பள்ளிக்கு புறப்பட்டனர். 

வேனை வட்டம் 21-ஐ சேர்ந்த நாராயணசாமியின் மகன் கோபால் இயக்கினார். வேன் வட்டம்-4 புண்ணங்குளம் அருகே அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வேன் ஒட்டுநர் கோபால் வட்டம் 21-ஐ சேர்ந்த செல்வராஜ் மப்பேட்டில் சென்றுகொண்டிருந்த போது அவர் மீது மோதாமல் இருப்பதற்காகத் திருப்பிய போது, வேன் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 13 மாணவிகள் காயமடைந்தனர். 

தகவலறிந்து வந்த அருகில் இருந்தவர்கள் என்.எல்.சி மருத்துவமனையில் சேர்ந்தனர். அதில், 11 பள்ளி மாணவிக்கு லேசான காயமும், இரண்டு மாணவிகளுக்குப் பலத்த காயமும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெய்வேலி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com