47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சசிகலா, தினகரன் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது: தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.

சசிகலா, தினகரன் இல்லாமல் பொதுக்குழுக் கூட்ட முடியாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2017, 8:45 am

தினமணி

சசிகலா, தினகரன் இல்லாமல் பொதுக்குழுக் கூட்ட முடியாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டது. இதில் சசிகலா, தினகரனை கட்சியை விட்டு நீக்குவது, பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது, தினகரன் முடிவுகள் செல்லாது உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் புதுச்சேரியில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேரும் இன்று அவசர ஆலோசனைக்
கூட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் இக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது:
சென்னையில் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 40 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. இதில் இருந்தே அவர்கள் யார் பக்கம் எனத்தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்கள் மனதில் உள்ளதை கூறாமல் இன்னும் பலர் உள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி நீக்கப்படுவது உறுதி.

பொதுச்செயலர் சசிகலா, தினகரன் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது. ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் தரப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சசிகலா நீக்க தீர்மானத்தை முன்மொழிந்த மனோஜ் பாண்டியனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பு உள்ளது. தகுதி என்ன உள்ளது. முன்வரிசையில் கேபி.முனுசாமி அமர்ந்துள்ளார். கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.

துணைப் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளவர்கள், ஏன் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என அறிவிக்கவில்லை. முதலில் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என அறிவித்தால் அவர்கள் யாரும் எந்த பொறுப்பிலும் இருக்க முடியாது. நான்கு தீர்மானங்களும் செல்லாது.  பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது.

அவர் சிறையில் உள்ளதால் நான்கில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பொதுச்செயலாளர் அனுமதியுடன் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது. அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.