இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

4 அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு

நான்கு அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு புதிய செயலாளர்களை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:45 pm

DIN

நான்கு அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு புதிய செயலாளர்களை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜி, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டச் செயலாளரான பி.தங்கமணி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அமைப்புச் செயலாளர் எஸ்.அன்பழகன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் டி.ரத்தினவேல் ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் அமைப்பு ரீதியாக மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக ஜெ.சீனிவாசனும், வடக்கு மாவட்டச் செயலாளராக ஆர்.மனோகரனும், தெற்கு மாவட்டச் செயலாளராக தொட்டியம் ராஜசேகரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலுள்ள எஸ்.பி.வேலுமணி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளராக கே.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள எம்.ஏ.முனியசாமி, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, வி.டி.என்.ஆனந்த் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தன், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக புதிய செயலாளராக திருப்பூர் சி.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.