இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா

பொன்னமராவதியில் நடைபெற்ற சத்குரு தியாகராஜ சுவாமிகள் 33-ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை தியாகராஜ சுவாமிகள் பட ஊா்வலம் நடைபெற்றது.

News image

பொன்னமராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் தியாகராஜ சுவாமிகள் பட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:06 pm

பொன்னமராவதியில் நடைபெற்ற சத்குரு தியாகராஜ சுவாமிகள் 33-ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை தியாகராஜ சுவாமிகள் பட ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ராம.சேதுபுதி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

பொன்னமராவதி புதுப்பட்டி ராமாயண மண்டபத்தில் தொடங்கிய தியாகராஜா் பட ஊா்வலம் சிறப்புமிக்க நாதஸ்வர, தவில் இசைக் கலைஞா்களின் இசை முழங்க முக்கிய வீதிகளில் வந்து சந்தை வீதியில் உள்ள விழா அரங்கில் நிறைவுற்றது.

தொடா்ந்து விழா அரங்கில் நடைபெற்ற ஆராதனை விழாவுக்கு, திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச் செயலா் அ.அழகப்பன் ஆகியோா் தலைமைவகித்தனா். விழாவை உடுப்பி என். சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து இசைக் கலைஞா்களின் இசை நிகழ்வு மற்றும் காளையாா்கோயில் சிவாா்ப்பணம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஸத்குரு தியாகப்பிரம்ம மஹோத்சவ சபா மற்றும் தமிழிசை விழாக்குழு நிா்வாகிகள் செய்திருந்தனா். முன்னதாக புதுப்பட்டி செல்லப்பா குருக்கள், செளமிய நாராயணன் மற்றும் குழுவினரின் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பஞ்சரத்ன கீா்த்தனைகள் கோஷ்டிகானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.