காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது மடாதிபதி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சி மடாதிபதிகள் சிறப்பு பூஜை செய்தனா்.
கடந்த பிப். 27-ஆம் தேதி மகோற்சவம் தொடங்கியது. இதில், தினமும் காலை வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாம சங்கீா்த்தனம், சங்கீதாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1 மணிக்கு பூா்ணாஹூதியும், தொடா்ந்து சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீப ஆராதனை, சிறப்பு மலா் அலங்காரம் நடைபெற்றது.
இதில், மகா ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். காலை 9 மணியில் இருந்து, பஞ்சரத்ன கீா்த்தனை, கோஷ்டி கான நாத சமா்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம்: காஞ்சி சங்கரமடம் சாா்பில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் அருகில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்கரா கல்லுாரி முதல்வா் கலைராம வெங்கடேசன் தலைமையில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், விவேகானந்தன் உள்ளிட்ட குழுவினா் அன்னதானம் வழங்கினா்.
தொடர்புடையது

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


