இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இரு அணிகள் இணைந்தாலும் சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர்: தினகரன்

இரு அணிகள் இணைந்தாலும் வி.கே. சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

DIN


சென்னை: இரு அணிகள் இணைந்தாலும் வி.கே. சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தாமாக பதவி விலக வேண்டும் என்பதற்காகவே முதல்வர் பழனிசாமிக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். தமிழக அரசு குறித்து 19 ஏம்எல்ஏக்களும் கொடுத்த கோரிக்கை மனு மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். எந்த அரசியல் ஆதாயத்துக்காகவும், முதல்வருக்கு எதிராக மனு கொடுக்கவில்லை. 

எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பதவி விலகினால்தான் பிரச்னை முடிவுக்கு வரும். பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அனைவரும் சொல்லும் நிலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இரு அணிகள் இணைந்தாலும் வி.கே. சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர், பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலருக்கு மட்டுமே உள்ளது.

எங்களது ஆதரவு ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் அணியில் இருந்து வெளியே வருவார்கள். துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.