சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுகள் அடங்கிய சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் விகே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி ஜெயலலிதா பேசிய உரைகள் அடங்கியுள்ளன.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று இரண்டு சிடிக்களை வெளியிட்டார். அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய விடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு சிடியில், 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசிய உரை அடங்கியுள்ளது. அப்போது, வி.கே. சசிகலாவும், அவரது குடும்பத்தாரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அது குறித்து ஜெயலலிதா அந்த உரையில் மறைமுகமாகப் பேசியிருந்தார்.
இரண்டு சிடிக்களையும் வெளியிட்டுப் பேசிய உதயகுமார், கட்சியைப் பிரிக்க நினைக்கும் யாரையும் அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


